அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
வெள்ளி, 31 டிசம்பர், 2010
25 காசுக்கு இனி மதிப்பில்லை
செவ்வாய், 28 டிசம்பர், 2010
ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும்: ஜெர்மன் அதிபர் மெர்கல்
பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நன்றி: இந்நேரம்.காம்
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
நேரத்தை முறைப் படுத்துவோம்

1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multi tasking) சமீபகாலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your Priorities) ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். உதார ணமாக, தீப்பற்றிக் கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
3. உடற்பயிற்சி செய்யுங்கள் (Exercise) உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!
4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘No’ with kindness) நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம் தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயர்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!
5. காலையில் சீக்கிரமாக எழ முயற்சியுங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குங்கள் டைரிக் குறிப்பு எழுத பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!
6. போதுமான அளவு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் (Get enough rest) ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணிநேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!
7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations) உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!
8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times) ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!
9. தேவையில்லாதபோது இணையம் / செல்பே சியை அணைத்துவிடுங்கள் (Unplug) இணையத்தை உலாவுவதிலும், செல் பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking) ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்த கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். வெற்றி நமக்கே..!!
வியாழன், 23 டிசம்பர், 2010
ஆயுர்வேத மருத்துவம் : முஸ்லிம் சகோதரிகள் சாதனை!

இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சர்மா குறிப்பிடுகையில், ‘ஆயுர்வேத படிப்புக்கு சமஸ்கிருத அறிவு தேவை. இதனால் இந்த படிப்பை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஆனால் இந்த சகோதரிகள் தைரியமாக படிப்பைத் தேர்வு செய்து, கடுமையான உழைப்பின் காரணமாக ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்’ என்றார்.
இவரது தந்தை ஹம்சா குறிப்பிடுகையில், “அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒன்றாகப் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே வகுப்பில் படித்த என் மகள்கள், ஒரே மாதிரியாக கல்லூரியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நான் 25 ஆண்டுகளாக அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு தீங்கு இழைக்காதவை. அதிகப்படியாக முஸ்லிம் மாணவ / மாணவிகள் இதில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கு சமஸ்கிருதமும், உருதும் மிக மிக அவசியம்.
புதன், 22 டிசம்பர், 2010
காஸ் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் அரசுக்கு தே.மு.தி.க., வலியுறுத்தல்
நன்றி: தினமலர்
திங்கள், 20 டிசம்பர், 2010
கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட மாநாடு

புதன், 15 டிசம்பர், 2010
காரைக்காலில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா?
புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது முதல் காரைக்காலில் ஒரு பொது மருத்துவமனைதான் உள்ளது. மேலும், தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றும் இயங்குகிறது. வேறெந்த மருத்துவ வளர்ச்சியும் இங்கு இல்லை.
600 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. குறிப்பாக, இதயக் கோளாறு, சிறுநீரகச் சிகிச்சை, விபத்துச் சிகிச்சை, தலைப் பகுதி சிகிச்சைக்கு நிபுணர்கள் இல்லை.
இதுபோன்ற சிகிச்சை பெற தஞ்சாவூர் அல்லது புதுவைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. மேலும், சிடி ஸ்கேன் இருந்தும், அதை இயக்க நிபுணர் இல்லாததால், நோயாளிகள் இந்த வசதியைப் பெற வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. அதேபோல, சிறுநீரக டயாலிஸிஸ் பிரிவு ஏற்பாடு செய்வதில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட காரைக்காலுக்கு இந்த மருத்துவ வசதிகள் போதாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இங்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைநிலை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, வாரம் ஒருநாள் சிறப்பு சிகிச்சைக்கான நிபுணர்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்தும் வெற்றிகரமாக இல்லை. கடந்த சில வாரங்களாக மருத்துவக் குழுக்கள் வருவது இல்லை.
அதோடு, அரசு சார்பில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாகச் செயல்படவில்லை என்ற குறை மக்களிடையே நிலவுகிறது. பெரும்பாலான நிலையங்கள் மிகவும் பாழடைந்த நிலையிலும், ஒப்பந்த மருத்துவர்களுமே இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் சிறப்பான அரசு மருத்துவமனை, மகளிர், குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, 8-க்கும் அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
இந்த நிலையில், காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளது. இங்கு காஞ்சி ஜயேந்திரர் தமது அறக்கட்டளை சார்பில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க புதுவை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல் புதுவை அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பிராந்தியமாக உருவாக்க, நட்சத்திர ஹோட்டல் கட்ட முன்வருவோருக்கு சுற்றுலாத் துறை அதிகபட்சமாக ரூ.1 கோடி மானியம் வழங்குகிறது. இதேபோல, காரைக்காலில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் கூறியது: புதுவையில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 1000 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களில் உள்ளூரில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கு குறிப்பிட்ட அளவு மானியம் அளிக்கும் முடிவை அரசு எடுக்கலாம்.
காரைக்காலில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், எதிர்காலத்தில் மருத்துவ வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து விரைவான முடிவை புதுவை அரசு மேற்கொண்டால், காரைக்கால் மட்டுமல்லாது, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பயன்பெறுவர் என்றார் அவர்.
சுகாதார வசதியில் காரைக்கால் தன்னிறைவு பெற, தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதும், மருத்துவமனை கட்ட நிறைவான மானிய உதவித் திட்டங்களை விரைவாக முடிவெடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
நன்றி: தினமணி
செவ்வாய், 14 டிசம்பர், 2010
இஸ்லாமிய குண நலன்கள்
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)
2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:43.
3.இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?
தந்தையின் திருப்தி :இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.
தாய்க்கு நன்மை செய்வது :
இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத், மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)
4. பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?
ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவனாக
5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?
ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)
திங்கள், 13 டிசம்பர், 2010
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்;

ஞாயிறு, 12 டிசம்பர், 2010
ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது

தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.
இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.
சனி, 11 டிசம்பர், 2010
ஆஷூரா நோன்பு ஏன் ஏதற்கு?
'إن عدّة الشُهور عند الله اثنا عشر شَهراً في كتاب الله يوم خلق السماوات و الأرض ........ '
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - (அல்குர்ஆன் 9:36)
எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகத்தை படைக்கும்போதே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை அல்லாஹ் வரையறுத்து விட்டான் என மேற்கூறிய திருமறை வசனம் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல்மாதத்தில் (முஹர்ரம் 1432) நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த மாதத்தில்தான் ஆஷூரா என்றழைக்கப்படும் சிறப்பான நாள் ஒன்று உள்ளது. ஆம் அது முஹர்ரம் 10 வது நாளாகும். ஆனவக்காரன் பிர்ஆவ்னிடமிருந்து இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய முஸ்லீம்களையும் அல்லாஹ் தன் வல்லமையால் காப்பாற்றிய நாள்தான் இந்த 10 வது நாள்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா (அலை) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றும் விடை பகர்ந்தார்கள்'.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். (இந்த சம்பவம் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு ஸஹீஹூல் புஹாரி, மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)
மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக, ஆஷூரா நாளுக்கு முந்தைய நாளான முஹர்ரம் 9 அன்றும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், 'இனிவரும் காலங்களில் நான் உயிரோடிந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகய இரு தினங்கள் நான் நோன்பு வைப்பேன்' என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தனர்.(நூல் : புஹாரி, முஸ்லிம்) இருப்பினும் அவர்கள் அதே வருடத்தில் மரணமடைந்தனர்.
எனவே முஹர்ரம் 9,10 ஆகிய தினங்களில் நாம் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். இதை உறுதி படுத்துவதாக கீழ்க்காணும் நபிமொழி அமைந்துள்ளது.
ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப்பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரழி), நூல் : புஹாரி, முஸ்லிம்)
இந்த வருடத்தில் நோன்பு வைப்பதால் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுவதினால் மனிதன் சுத்தமாகிறான். பாவங்களற்ற மனிதன்தான் அல்லாஹ்வின் கிருபையால் சுவர்க்கம் செல்லமுடியும். இதைவிட பெரிய பலன் என்ன இருக்கிறது? எனவே சுன்னத்தான இந்த நோன்பை நோற்று, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனம் அடைய முயல்வோமாக!
நன்றி: ஒற்றுமை.நெட்
காரைக்காலில் அறிவியல் கண்காட்சி

வியாழன், 9 டிசம்பர், 2010
சர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10விடயங்களும் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த திகதியும் இடமும் :-
இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.
தாயின் கன்னிப் பெயர் :-
பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.
விலாசம் :-
நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.
விடுமுறைகள் :-
உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது,உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.
வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-
இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.
முறையற்ற படங்கள் :-
பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.
ஒப்புதல்கள் :-
இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.
விளம்பரங்கள்:-
நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.
தொலைபேசி இலக்கம் :-
உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.
பிள்ளைகளின் பெயர்கள் :-
இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.
பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-
பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.ஈமானுக்கு சோதனையான காலம் இது.விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும்,வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கமார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள்.
பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.சிந்திப்போம் செயல்படுவோம்.
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)2:152.
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்;எனக்கு மாறு செய்யாதீர்கள்
புதன், 8 டிசம்பர், 2010
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி?

அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.
செவ்வாய், 7 டிசம்பர், 2010
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு உரிமை 2 ஆண்டுகள்
கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.
கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.
முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.
டிசம்பர் 6 தமிழகம் முழுவதும் த. மு. மு.க. தொடர்முழக்க ஆர்பாட்டம்

திங்கள், 6 டிசம்பர், 2010
உலகின் சிறந்த செய்தி ஒளிபரப்புக்கான விருதை அல் ஜஸீரா வென்றது

திரைப்படங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் போன்று விருது கொடுப்பதை போல ஊடக துறையில் செய்தி ஒளி, ஒலிபரப்பு துவங்கி பல்வேறு துறைகளில் தரமானவைகளுக்கு விருது அளித்து வருகிறது. இந்த பட்டியலை உலகெங்கும் உள்ள பல்வேறு முன்னணி ஊடகங்களின் முக்கியமானர்கள் இதில் நடுவர்களாக கலந்துகொண்டு இதை சேர்வு செய்து உள்ளனர். இந்தியவை சார்ந்த என்.டி.டி.வி புகழ் ஜெய் சவ்ஹானும் இந்த நடுவர் குழுவில் உள்ளார்.
சர்வதேசிய அளவில் சிறந்த ஊடக துறைக்கான இந்த ஆண்டின் (2010 ) விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சம் மூன்று பரிந்துரைகள் சேர்வு செய்யப்பட்டது, அதில் ஒன்றிற்கு சிறந்தவைகான விருது வழங்கப்பட்டது.
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
ஆன்மிக சிந்தனைகள் » விவேகானந்தர்

* நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.
* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.
* இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.
* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.
* உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.
- விவேகானந்தர்
கடவுள் நம்பிக்கை எதற்காக!
* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.
* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.
* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.
* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.
* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.
* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.
-விவேகானந்தர்
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.
அரபு அமீரகத்தில் தேசிய தின கொண்டாட்டம்

திங்கள், 29 நவம்பர், 2010
உலகில் மிகப்பெரிய

ஞாயிறு, 28 நவம்பர், 2010
பொன் மொழிகள்
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஸஜ்தா வசனம் ஒதும் போது ஸஜ்தாவில் ஓதும் துஆ
سجد وجهى للذى خلقه وشق سمعه وبصره بحوله و قوته
ஸஜத வஜ்ஹிய லில்லதீ ஹலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பிஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி நூல்: திர்மிதீ
பொருள் : என் முகத்தைப படைத்து, அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
ஆஷுரா நோன்பு
புஹாரி : 4506 இப்னு உமர் (ரலி).
ஆஸுரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!” என்றார்கள்.
புஹாரி : 2005 அபூமூஸா (ரலி).
”ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
புஹாரி: 2006 இப்னு அப்பாஸ் (ரலி).
சனி, 27 நவம்பர், 2010
சிரியா சென்றார் குடியரசுத்தலைவர்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்டு சிரியா நாட்டு தலைநகர் டமாஸ்கஸ் சென்றார், சிரியா அதிபர் அலுவலக அமைச்சர் மன்சூர் ஆஜம் குடியரசு தலைவர் பிரதீபா பட்டீலை விமான நிலையத்தில் வரவேற்றார் .
திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை

இளைய சமுதாயம் செல்போனினால் சீரழிவதை தடுக்க முஸாஃபர் மாவட்டத்தின் அனைத்து சமூக தலைவர்ளும் கூடி இது பற்றி ஆலோசித்தனர். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இறுதியில் இந்த சட்டத்தை ஊரில் பிறப்பித்தனர்.
பஞ்சாயத்து கமிட்டியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்தர் மாலிக் இதை தெரிவித்துள்ளார்கள்.
வெள்ளி, 26 நவம்பர், 2010
வியாழன், 25 நவம்பர், 2010
தேர்தலில் NRIகள் வாக்களிக்கலாம்! வயலார் ரவி

இதற்கான அரசு ஆணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வயலார் ரவி மேலும் கூறுகையில், வெளிநாட்டுக்கு வேலையின் நிமித்தமாக சென்று, குடி உரிமை பெறாமல், அங்கேயே வாழ்ந்து வரும் இந்தியர்கள், தேர்தல் நடக்கும்போது இந்தியாவுக்கு வந்து தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.
சவூதிஅரேபியா, துபாய், குவைத் போன்ற அரபு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டும் இந்தியர்கள் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலை நிமித்தமாக சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 24 நவம்பர், 2010
நவ.25ல் ஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி அவர்களின் ஒத்துழைப்புடன் ஆறு ஆண்டு கால பெரும் முயற்சியில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையம் இந்திய வர்த்தகர்கள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு பாலமாக செயல்படும்.
1970 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் வருடத்திற்கு 180 மில்லியன் டாலராக இருந்து தற்பொழுது அது 45 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மையம் ஷார்ஜாவில் திறப்பு விழா காண இருப்பதற்கு ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் டைரக்டர் ஜெனரல் ஹுசைன் அல் மஹ்மூதி பாராட்டு தெரிவித்தார். இம்மையத்தின் வளர்ச்சிக்கு எல்லாவித ஒத்துழைப்புகளும் நல்கப்படும் என்றார்.
ஊடகங்கள் இந்த மையம் குறித்த விழிப்புணர்வினை வர்த்தகர்கள் மத்தியில் ஏற்படுத்திட முன்வரவேண்டும் என இதன் இயக்குநர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை

அபுதாபி வருகை புரிந்த இந்திய ஜனாதிபதியை அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி, அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், அமீரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் விரிவான செய்திக்கு :
http://gulfnews.com/news/gulf/uae/government/indian-president-pratibha-patil-arrives-in-abu-dhabi-1.715543
நன்றி: மன்னடிகாக.காம்
பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை?
2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.
5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.
7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி)
ஞாயிறு, 21 நவம்பர், 2010
இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி?

இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.
இஸ்லாமிய கொள்கையான 'ஷரியா'-வின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது 'ஷரியா'-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மதத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன'' என்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
- சி.சரவணன்
இஸ்லாமிய வங்கிகள் - சில விபரங்கள்:
+ இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது.
+ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
+ கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில், இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.
+ உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.
+ மதுபானம், சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களை இஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன.
நன்றி: நாணயம் விகடன் (30-11-2010)
உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை

இது ஆச்சரியப்படதக்க் உயரமான 10,175 m (33,382 feet) பறக்க வல்லது.
இதனால் வருடத்துக்கு 3-8 முட்டைகளை இடும்இந்த பறவையால் உலகின் மிக உயரமான மலையான இலகுவாக எவரெஸ்யை இலகுவாக 8,848 m (29,028 feet) பறக்க முடியும்.
இதனால் ஆக்ஸிஜென் மிக குறைந்த இடத்திலும் சுவாசிக்கவும் அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும்இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெட் வேகத்தில் பறக்க முடியும்இதனுடைய நீளம் 71–76 cm (28-30 in) உம் நிறை 1.87-3.2 kgஆகும்[lbs]
சனி, 20 நவம்பர், 2010
உலக நாடுகளின் நாடாளுமன்ற பெயர்கள்

இந்தியா - மக்களவை, மாநிலங்களவை
ஆஸ்திரியா - ரெய்ஷராத்
பல்கேரியா - சோப்ராஞ்சி
டென்மார்க் - போல்கடிங்
அயர்லாந்து - டேயில்ஜறான்
இங்கிலாந்து - பார்லிமென்ட்
பிரான்ஸ் - தேசிய அசெம்பிளி
ஜெர்மனி - புண்டேச்டாக்
ஐஸ்லாந்து - அல்திங்
இத்தாலி - செனேட்
ஜப்பான் - டையட்
நெதர்லாந்து - ஸ்டேட்ஸ் ஜெனரல்
நார்வே - ச்டோர்டிங்
பெர்சியா - மஜ்லிஸ்
கல்கி அவதாரம்
இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன.
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:
"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"சிஷ்ய சாகா ஸமன்விதம்.."(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)
இதன் பொருள்:"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்..
அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "விஷ்ணு" என்றால் இறைவன்(அல்லாஹ்), "சோமாநிப்" எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி - சமாதனம் என்பதாகும். "ஆமினா" என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், "நம்பிக்கையாளர்" என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.
மிகவும் உயர்ந்த குடும்பத்தில் - உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் - ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது.
"ஹிரா" குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.
பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.
சசி-சமரசம் 1-15 ஜுன் 2004
நன்றி
மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.
10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.
முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?
நன்றி: இந்நேரம். காம்.
வியாழன், 18 நவம்பர், 2010
ஞாயிறு, 14 நவம்பர், 2010
அரஃபா நோன்பு

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி
அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது. அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.