
துபாய்: பிப்ரவரி 04: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. அம்பகரதூரில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமண உதவி, முதியோர்களுக்கு முதியோர் உதவி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
2. அமீரகத்தில் வாழும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர்கள் ஹஜ் மைதீன், மகபூப் அலி, இருவரும் இதுவரை வசூல் செய்யப்பட்ட சந்தா நிலவரத்தையும், கடந்த ஆண்டு பித்ரா விநியோகம் செய்த கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம்துணை தலைவராக சர்புதீன் அவர்களையும், துணை செயலாளராக ஷாஹுல் அவர்களையும் புதிய கூடுதல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தனர்.
கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த கூட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.