சனி, 12 ஜனவரி, 2013

உலகில் அதிக மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.

உலகில் அதிக  மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.


10. பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

9. ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.

இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.

இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உணரப்படுகிறது


8.உருசிய மொழி (Russian language, русский язык, ருஸ்க்கி இசிக்) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலருஸ் போன்ற நாடுகளின் அதிகாரபூர்வ மொழி. 1917 வரை உருசியப் பேரரசின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக இருந்தது.



7. வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காள தேசமாகும். இந்த வங்காள தேசத்தினுள் தற்போதைய பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது). இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


6. போர்த்துக்கீச மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. லத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. லத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.



5. அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.



4. இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5].
இந்தியாவின் 22[6] தேசிய மொழிகளுள், இந்தியும் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவன்அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[7]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமசுகிருதம் கலந்த இந்தியைவிட, மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .


இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.



3. ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், எசுப்பானியம்(ஸ்பானிஷ்), இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். 380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவானோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், அறிவியல், திரைத்துறை, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் ஏனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிகபட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.

2. எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.


எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது


1. சீன மொழி: சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.


18. தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[4]
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.[5] திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக