செவ்வாய், 26 அக்டோபர், 2010

மண்ணறை முதல் நாள்

மண்ணறை முதல் நாள்
நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)
மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்
அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.(40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள். (மியுசியத்தில் உள்ள பிர் அவன் வேதனை செய்யப்படுவதாக குர் ஆன் இயம்புகிறது)
மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.
அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ண றையில் அவனை மகிழ்விக்கும்.

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.- அல் குர் ஆன்59:10

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும். முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

0 முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.

0 ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.

0 மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.

0 வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.

0 இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

0 முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

0 அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

0 இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

0 முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள். எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

இயாழ் இப்னு ஹிமார்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் பணிவாக இருங்கள். ஒருவர் மற்றவரைவிட பெருமை கொள்ள வேண்டாம். ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ் என்னிடம் இறைச்செய்தி அறிவித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 602
)