வெள்ளி, 16 ஜூலை, 2010

பொறாமை கொள்ளக்கூடாது

நபிமொழி

  • நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது. (நூல் : அபூதாவூத்)
  • இருவரை தவிர வேறு எவர் மீதும் பொறாமை கொள்ளகூடாது, இறைவனால் ஞானம் வழங்கப்பெற்று அதன் வழிநடந்து அதனைப் பிறர்க்கும் கற்றுத் தருபவர். இறைவனால் செல்வம் வழங்கப்பெற்று அதனை நல வழியில் செலவழிப்பவர். (நூல் : புஹாரி, முஸ்லிம்)

இறைவசனம்

  • இவர்கள் இறைவன் தன அருளினால், மக்களுக்கு வழங்கி இருப்பதை கண்டு அவர்கள் மீது பொறமை கொள்கிறார்களா ? (அல்-குர்ஆண்- 4:54)
  • (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் (எனப் பிரார்த்தனை புரியுங்கள் (அல்-குர்ஆண் 20:131)

சனி, 10 ஜூலை, 2010

வளமான வாழ்க்கைக்கு பத்து சிந்தனைகள்

  1. கடினமாக உழையுங்கள்
  2. என்றும் நல்லதையே பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்
  3. பிறரை மகிழ்ச்சியடைய செய்யுங்கள் நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்
  4. உடற்பயிற்சி செய்யுங்கள்
  5. அனைவரிடமும் அன்பாய் பேசுங்கள்
  6. வீணான செலவை தவிர்த்திடுங்கள்
  7. பிறருக்கு உதவிடும் மனபக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
  8. தீய பழக்கத்தை கை விடுங்கள்
  9. கோபம் கொள்வதை விரட்டி விடுங்கள்
  10. பிறரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்

வெள்ளி, 9 ஜூலை, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்

அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்