புதன், 26 ஜனவரி, 2011

சி.ஏ. படிப்பில் சேர தேர்வான மாணவிக்குப் பாராட்டு

காரைக்கால், ஜன. 22: காரைக்காலில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, சி.ஏ. படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சிஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் காரைக்காலை சேர்ந்தவர்களும், ஏழை மாணவர்களும் பயிற்சி பெற வசதியாக காரைக்கால் அஞ்சுமன் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் நேரடியாக சிஏ படிப்பில் சேரும் வகையில் நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களில் காரைக்கால் புதுத்துறை கிராமத்தைச் சேரந்த ஹாஜா மெய்னுதீன் மகள் பௌஜியா சி.ஏ. படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா அஞ்சுமன் இஸ்லாமிய சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலை சேர்ந்த அனைத்து சமுதாய மாணவர்களும் பயன் பெறும் வகையில் இலவசமாக இப் பயிற்சியை நடத்துவதாகவும், மாவட்டத்தில் முதல் முறையாக இப்படிப்பில் சேர தேர்வான மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்டோர் தெரிவித்தனர். மேலும், பயிற்சி வகுப்புகளை நடத்திய பேராசிரியர் எம்.ஐ. லியாகத்அலி, வழக்குரைஞர் எஸ்.எம். ஹபீபு முகம்மது, ஆடிட்டர்கள் சிதம்பரநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திங்கள், 24 ஜனவரி, 2011

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை-தேர்தல் ஆணையம் பரிசீலனை

திருவனந்தபுரம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,

தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி: தட்ஸ் தமிழ்

சனி, 22 ஜனவரி, 2011

இடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது.

அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது..

nandri: TNTJ.NET

வியாழன், 13 ஜனவரி, 2011

அம்பகரத்தூர் மதரசா மேம்பாட்டுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி

அம்பகரத்தூர் , ஜன. 12: காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் மதரசா மேம்பாட்டுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியை முதல்வர் வி. வைத்திலிங்கம் வழங்கினார்.

அம்பகரத்தூர் மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் நடத்தப்படும் மதரசா வின் மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன் புதுவை அரசை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திங்கள்கிழமை காரைக்கால் வந்த முதல்வர் வி. வைத்திலிங்கம், மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தார்களிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி

திங்கள், 3 ஜனவரி, 2011

நியாய விலைக் கடையின் சரக்கிருப்பு விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாகPDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது.

எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

நன்றி: chennaionline.com