திங்கள், 24 ஜனவரி, 2011

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை-தேர்தல் ஆணையம் பரிசீலனை

திருவனந்தபுரம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,

தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி: தட்ஸ் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக