சனி, 12 ஜனவரி, 2013

உலகில் அதிக மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.

உலகில் அதிக  மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.


10. பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

9. ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.

இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.

இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உணரப்படுகிறது


8.உருசிய மொழி (Russian language, русский язык, ருஸ்க்கி இசிக்) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலருஸ் போன்ற நாடுகளின் அதிகாரபூர்வ மொழி. 1917 வரை உருசியப் பேரரசின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக இருந்தது.7. வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காள தேசமாகும். இந்த வங்காள தேசத்தினுள் தற்போதைய பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது). இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


6. போர்த்துக்கீச மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. லத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. லத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.5. அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.4. இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5].
இந்தியாவின் 22[6] தேசிய மொழிகளுள், இந்தியும் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவன்அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[7]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமசுகிருதம் கலந்த இந்தியைவிட, மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .


இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.3. ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், எசுப்பானியம்(ஸ்பானிஷ்), இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். 380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவானோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், அறிவியல், திரைத்துறை, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் ஏனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிகபட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.

2. எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.


எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது


1. சீன மொழி: சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.


18. தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[4]
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.[5] திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

புதன், 9 ஜனவரி, 2013

உலகில் சொகுசாக வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களில் முதல் 10 இடங்களில் இருக்கும் நகரங்கள்.

உலகில் சொகுசாக வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களில் 2012 இன் கணக்கெடுப்பு பிரகாரம் டோக்யோ (ஜப்பான்) நகரம் முதலிடம் பெற்றுள்ளது, ஆறாவது இடத்தை ஜுரிச் மற்றும் சிங்கப்பூர்  இரண்டு நகரங்கள் பங்குபோட்டுள்ளன.

 முதல் 10 இடங்களில் ஜப்பான் 3 இடங்கள் பிடித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவின் டெல்லி 113 ஆவது இடமும் மும்பை நகரம் 114 ஆவது இடமும் பெற்றுள்ளது,

முதல் 10 இடங்களில் இருக்கும் நகரங்கள்:

1. டோக்யோ (ஜப்பான்)
2. லுவாண்டோ (அங்கோலா)
3. ஒசாகா (ஜப்பான்)
4. மாஸ்கோவ் (ரஷ்யா)
5. ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
6. ஜுரிச் (சுவிட்சர்லாந்து)
6. சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
8. ந்ஜமேனா (சாட்)
9. ஹாங்காங் (ஹாங்காங்)
10. நகோய (ஜப்பான்)

திங்கள், 7 ஜனவரி, 2013

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! – ஆய்வில் தகவல்!

நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.
முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.
இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.
சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.
 
நன்றி: தூதுஆன்லைன்
 

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பாலியல் வன்முறைகளை தடுக்க பள்ளி மாணவிகளை கோட் அணியச் சொல்லும் புதுவை அரசு

புதுவையில் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதை அடுத்து இதுபோல சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது.

புதுவையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மாணவி உயிரிழந்த பின்னர், டெல்லி மாணவியின் சம்பவத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் போல, புதுவையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களா நடைபெற்றது.

இதை அடுத்து புதுவை அரசின் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், கல்வி அதிகாரிகள் கூடி, இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்காவண்ணம் மாணவிகளைப் பாதுகாப்பது எப்படி என்று ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாணவிகளுக்கு தனிப் பேருந்து இயக்குவது என்றும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், அதோடு மாணவிகளின் சீருடைக்கு மேல் கோட் அணிய வேண்டும் என்றும் யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

இந்த யோசனைகளை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவும் முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் புதுவை அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவிகள் கோர்ட் அணிவதால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை. வெப்ப சூழ்நிலையில் கோர்ட்டுடன் பயணிப்பது சுகாதார கேட்டை உருவாக்கிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களின் சம உரிமைகளை தட்டிப் பறிக்கும் செயலாகவே புதுவை அரசின் இந்த செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளன.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கபடுவது அதிகமாகி கொண்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்படும் தருணம் மட்டும் நம்முடைய மீடியாக்கள் அதனை பரபரப்பாக பேசுகின்றன, நாமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் தவறில்லை மாறாக நாம் இதனை எவ்வாறு தடுப்பது இது ஏன் இப்பொழுது அதிகமாகி வருகிறது என்பதனை சிந்திக்க வேண்டும்.
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்தெந்த நிலைகளில் பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள் என்பதனை ஆராய வேண்டும்.
 
கலவரங்கள்: குறிப்பாக நம் நாட்டில் எந்தப்பகுதிகளில் கலவரம் ஏற்படுகிறதோ அந்தப்பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள், குறிப்பாக நம் நாட்டில் குஜராத், காஷ்மீர், ஒரிசா மற்றும் அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலும் நம் அண்டை நாடான இலங்கையிலும் பாலியல் பலாத்காரம் சில சமூகங்கள் மீது ஏற்படுத்தபடுகிறது.
இவ்வாறு கலவரங்களில் ஏற்படும் பாலியல் பலாத்காரத்தை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும், இது போன்ற நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  உரிய பாதுகாப்பை உரிய அரசாங்கம் செய்துதரவேண்டும். பெண்கள் இதுபோன்ற தருணங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது போன்ற பயிற்சிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி கொடுக்கவேண்டும்.
 
சமூகங்கள்:   நம் சமூகம் பெண்களை காட்சிபொருளாகவும், காமபொருளாகவுமே பார்கின்றன, குழந்தைகளுக்கு பள்ளிபருவத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும், ஊட்டி வளர்க்கவேண்டும், அந்நிய ஆடவர்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது, அநாகரிகமான தொடுதல்களுக்கு எவ்வாறு எதிர்புதெரிவிக்க வேண்டும் என்று சொல்லிதருதல் வேண்டும், நம் கண் எதிரில் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படும்போது நாம் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும்,
 
பெண்கள் தனக்கு ஏற்படும் கேளிக்கைகளை தன் பெற்றோரிடம் கூறவே பயப்படுகிறார்கள் காரணம் பெற்றோர்கள் தங்கள் மீது குற்றம் இருப்பதாகவே பேசுகின்றன சில பெற்றோர்கள் உடனே பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை நிறுத்த செய்கின்றன இதனால் தனக்கு ஏற்படும் இன்னல்களை பெண்கள் மறைக்கநினைக்கின்றன.
 
கவர்ச்சி: பெண்களை நம் ஊடகங்களும் சமூகமும் கவர்ச்சி பொருளாகவே சித்தரிக்கின்றன, இன்றைய காலகட்டத்தில் கவர்ச்சி கட்டயமாகபட்டுள்ளது, சினிமா மற்றும் சின்னத்திரைகளில் பெண்களை கவர்ச்சியாகவே காட்டவிரும்புகின்றன, விளம்பரங்களிலும் பெண்களை கவர்ச்சியாகவே காட்டுகின்றன.
 
ஊடகங்கள்:
சினிமாக்களில் மற்றும் சின்னத்திரைகளில் தனியாக செல்லும் பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் பின்பு ஒருவர் நான்கு ஐந்து பேரை அடித்து அப்பெண்ணை காப்பாற்றுவது போன்றும் காட்டுகின்றான் நிஜ வாழ்கையில் இவ்வாறு ஒருவர் ஐந்து நபர்களிடமிருந்து காப்பற்றமுடியுமா, பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் காட்டுகின்றன, இதுபோன்றவைகளை பார்க்கும்போது அவனும் அதுபோன்று செய்ய ஊந்தப்படுகின்றான், இதுபோன்ற காட்சிகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 
 

ஆடைகள்: இந்த நாகரிக உலகத்தில் பெண்கள் நாகரீகமாக உடை உடுத்த விரும்புகின்றனர், ஆனால் சில பெண்கள் நாகரிகமான உடை என்று அநாகரிகமான உடை அணிகின்றனர் உதாரணமாக குட்டை பாவாடை, லோ ஹிப்  பேன்ட், இதனால் இவர்களுக்கும் பாதிப்பு இவர்களால் மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு.

சிலர் கவர்ச்சியாக உடை அணியும்போது மற்றவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு  என்றாள், ஒருவன் ஒரு பெண்ணை கவர்ச்சியான உடையில் காணும்போது காமவெறிக்கு உள்ளாகி அதனை தீர்த்துக்கொள்ள அவனுடைய வெறியை மற்ற பெண்களிடமும் குழந்தைகளிடமும் காட்டுகின்றான், ஆகையால் ஆடையில் நாகரீகம் தேவை அநாகரிகம் கூடாது.

சுதந்திரம்: நம் தேசத்தந்தை காந்தியடிகள் எப்பொழுது ஒரு பெண் நகைகள் அணிந்துக்கொண்டு சுதந்திரமாக இரவில் தனியாக  செல்லமுடிகிறதோ அப்பொழுதுதான் நாம் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக பொருள் என்றார், ஆனால் இப்பொழுது ஒரு பெண் பகலில் நகைகள் அணியாமல்கூட செல்ல முடியவில்லை. இந்நிலை மாறவேண்டும் என்றால் தண்டனை கடுமயக்கப்படவேண்டும்.
 
 
(குறிப்பு: இது என்னுடைய கருத்து இதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் நான் திருத்திகொள்கிறேன்.)   

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு தவ்ஹீத் ஜமா அத் கண்டனம்

காரைக்கால், செப். 20: குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாட்டைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவ்ஹீஜ் ஜமா அத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவ்ஹீத் ஜமா அத் மேலாண்மைக் குழு உறுப்பினர் பஷீர் முகமது அல்தாபி அளித்த பேட்டி:

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமா அத் வழிபாடு மற்றும் இயக்கப் பணிகளை செய்துவருகிறது. இந்த இயக்கத்திற்கு எதிரான கருத்துடைய இஸ்லாமியர் சிலர் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில், அங்கு இயக்க செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

வழிபாட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்செயல்களை கண்டித்து ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அம்பரகத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செயல் வன்மையாக கண்டிக்தத்தக்தது.

இஸ்லாத்தில் சீர்திருத்தப் பணிகளை செய்துவரும் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எங்களுக்கு எதிரான செயல்களை செய்துவருகின்றனர்.

இப்பிரச்னையில் நியாயம் கிடைக்கும் வரை போராடும்.

இப்பிரச்னை தொடர்பாக புதுவை முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பங்கேற்போம்.

அதேவேளையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒருசார்புடைய போக்கைக் கண்டித்து, காரைக்காலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

பேட்டியின்போது அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவர் அப்துல்ஹக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி

வியாழன், 20 செப்டம்பர், 2012

மூட்டைப் பூச்சி

சிறு வயதில் ஸ்கூலுக்கு போகும் போது சில வீட்டின் சுவர்களில் "மூட்டைப் பூச்சி அத்துப் போச்சு" என்று எழுதி வைத்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் மூட்டைப்பூச்சி என்றால் என்னவென்றும் அதன் அர்த்தமும் எங்களுக்கு என்னவென்று தெரியாது. வீட்டில் ஏதாவது ஒரு பூச்சியை அடித்தால் கூட "மூட்டைப் பூச்சி அத்துப் போச்சு" என்று சொல்லி சிரிப்போம்.

சவுதிக்கு வந்த பிறகு அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை

பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமுஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினிமூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது

• எம் அப்துல் காதர்நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..வேறு மற்றும் பாதுகாப்பான முறைகற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.நன்றி : கொங்கு தென்றல்

----

மூட்டைப் பூச்சியின் வரலாறு!!மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றனவகைகள்பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.உடலமைப்புவளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டுஉண்ணும் முறைகள்பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டுஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.Electric SteamerThe Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்நன்றி : நாளைய சமுதாயம்