ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பாலியல் வன்முறைகளை தடுக்க பள்ளி மாணவிகளை கோட் அணியச் சொல்லும் புதுவை அரசு

புதுவையில் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதை அடுத்து இதுபோல சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது.

புதுவையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மாணவி உயிரிழந்த பின்னர், டெல்லி மாணவியின் சம்பவத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் போல, புதுவையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களா நடைபெற்றது.

இதை அடுத்து புதுவை அரசின் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், கல்வி அதிகாரிகள் கூடி, இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்காவண்ணம் மாணவிகளைப் பாதுகாப்பது எப்படி என்று ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாணவிகளுக்கு தனிப் பேருந்து இயக்குவது என்றும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், அதோடு மாணவிகளின் சீருடைக்கு மேல் கோட் அணிய வேண்டும் என்றும் யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

இந்த யோசனைகளை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவும் முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் புதுவை அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவிகள் கோர்ட் அணிவதால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை. வெப்ப சூழ்நிலையில் கோர்ட்டுடன் பயணிப்பது சுகாதார கேட்டை உருவாக்கிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களின் சம உரிமைகளை தட்டிப் பறிக்கும் செயலாகவே புதுவை அரசின் இந்த செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக