ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கபடுவது அதிகமாகி கொண்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்படும் தருணம் மட்டும் நம்முடைய மீடியாக்கள் அதனை பரபரப்பாக பேசுகின்றன, நாமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் தவறில்லை மாறாக நாம் இதனை எவ்வாறு தடுப்பது இது ஏன் இப்பொழுது அதிகமாகி வருகிறது என்பதனை சிந்திக்க வேண்டும்.
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்தெந்த நிலைகளில் பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள் என்பதனை ஆராய வேண்டும்.
 
கலவரங்கள்: குறிப்பாக நம் நாட்டில் எந்தப்பகுதிகளில் கலவரம் ஏற்படுகிறதோ அந்தப்பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள், குறிப்பாக நம் நாட்டில் குஜராத், காஷ்மீர், ஒரிசா மற்றும் அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலும் நம் அண்டை நாடான இலங்கையிலும் பாலியல் பலாத்காரம் சில சமூகங்கள் மீது ஏற்படுத்தபடுகிறது.
இவ்வாறு கலவரங்களில் ஏற்படும் பாலியல் பலாத்காரத்தை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும், இது போன்ற நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  உரிய பாதுகாப்பை உரிய அரசாங்கம் செய்துதரவேண்டும். பெண்கள் இதுபோன்ற தருணங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது போன்ற பயிற்சிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி கொடுக்கவேண்டும்.
 
சமூகங்கள்:   நம் சமூகம் பெண்களை காட்சிபொருளாகவும், காமபொருளாகவுமே பார்கின்றன, குழந்தைகளுக்கு பள்ளிபருவத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும், ஊட்டி வளர்க்கவேண்டும், அந்நிய ஆடவர்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது, அநாகரிகமான தொடுதல்களுக்கு எவ்வாறு எதிர்புதெரிவிக்க வேண்டும் என்று சொல்லிதருதல் வேண்டும், நம் கண் எதிரில் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படும்போது நாம் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும்,
 
பெண்கள் தனக்கு ஏற்படும் கேளிக்கைகளை தன் பெற்றோரிடம் கூறவே பயப்படுகிறார்கள் காரணம் பெற்றோர்கள் தங்கள் மீது குற்றம் இருப்பதாகவே பேசுகின்றன சில பெற்றோர்கள் உடனே பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை நிறுத்த செய்கின்றன இதனால் தனக்கு ஏற்படும் இன்னல்களை பெண்கள் மறைக்கநினைக்கின்றன.
 
கவர்ச்சி: பெண்களை நம் ஊடகங்களும் சமூகமும் கவர்ச்சி பொருளாகவே சித்தரிக்கின்றன, இன்றைய காலகட்டத்தில் கவர்ச்சி கட்டயமாகபட்டுள்ளது, சினிமா மற்றும் சின்னத்திரைகளில் பெண்களை கவர்ச்சியாகவே காட்டவிரும்புகின்றன, விளம்பரங்களிலும் பெண்களை கவர்ச்சியாகவே காட்டுகின்றன.
 
ஊடகங்கள்:
சினிமாக்களில் மற்றும் சின்னத்திரைகளில் தனியாக செல்லும் பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் பின்பு ஒருவர் நான்கு ஐந்து பேரை அடித்து அப்பெண்ணை காப்பாற்றுவது போன்றும் காட்டுகின்றான் நிஜ வாழ்கையில் இவ்வாறு ஒருவர் ஐந்து நபர்களிடமிருந்து காப்பற்றமுடியுமா, பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் காட்டுகின்றன, இதுபோன்றவைகளை பார்க்கும்போது அவனும் அதுபோன்று செய்ய ஊந்தப்படுகின்றான், இதுபோன்ற காட்சிகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 
 

ஆடைகள்: இந்த நாகரிக உலகத்தில் பெண்கள் நாகரீகமாக உடை உடுத்த விரும்புகின்றனர், ஆனால் சில பெண்கள் நாகரிகமான உடை என்று அநாகரிகமான உடை அணிகின்றனர் உதாரணமாக குட்டை பாவாடை, லோ ஹிப்  பேன்ட், இதனால் இவர்களுக்கும் பாதிப்பு இவர்களால் மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு.

சிலர் கவர்ச்சியாக உடை அணியும்போது மற்றவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு  என்றாள், ஒருவன் ஒரு பெண்ணை கவர்ச்சியான உடையில் காணும்போது காமவெறிக்கு உள்ளாகி அதனை தீர்த்துக்கொள்ள அவனுடைய வெறியை மற்ற பெண்களிடமும் குழந்தைகளிடமும் காட்டுகின்றான், ஆகையால் ஆடையில் நாகரீகம் தேவை அநாகரிகம் கூடாது.

சுதந்திரம்: நம் தேசத்தந்தை காந்தியடிகள் எப்பொழுது ஒரு பெண் நகைகள் அணிந்துக்கொண்டு சுதந்திரமாக இரவில் தனியாக  செல்லமுடிகிறதோ அப்பொழுதுதான் நாம் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக பொருள் என்றார், ஆனால் இப்பொழுது ஒரு பெண் பகலில் நகைகள் அணியாமல்கூட செல்ல முடியவில்லை. இந்நிலை மாறவேண்டும் என்றால் தண்டனை கடுமயக்கப்படவேண்டும்.
 
 
(குறிப்பு: இது என்னுடைய கருத்து இதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் நான் திருத்திகொள்கிறேன்.)   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக