வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அல் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள நபிமார்கள்

  1. நபி ஆதம் அலைஹிவசல்லம்
  2. நபி இத்ரிஸ் அலைஹிவசல்லம்
  3. நபி நுஹ் அலைஹிவசல்லம்
  4. நபி ஹூத் அலைஹிவசல்லம்
  5. நபி ஸாலிஹ் அலைஹிவசல்லம்
  6. நபி லூத் அலைஹிவசல்லம்
  7. நபி இப்ராஹிம் அலைஹிவசல்லம்
  8. நபி இஸ்மாயில் அலைஹிவசல்லம்
  9. நபி இஷ்ஹாக் அலைஹிவசல்லம்
  10. நபி யாகூப் அலைஹிவசல்லம்
  11. நபி யூசுப் அலைஹிவசல்லம்
  12. நபி ஷுஐப் அலைஹிவசல்லம்
  13. நபி ஐயுப் அலைஹிவசல்லம்
  14. நபி துள்கிப்ல் அலைஹிவசல்லம்
  15. நபி மூசா அலைஹிவசல்லம்
  16. நபி ஹாருன் அலைஹிவசல்லம்
  17. நபி தாவுத் அலைஹிவசல்லம்
  18. நபி சுலைமான் அலைஹிவசல்லம்
  19. நபி இல்யாஸ் அலைஹிவசல்லம்
  20. நபி அலைச அலைஹிவசல்லம்
  21. நபி யூனுஸ் அலைஹிவசல்லம்
  22. நபி ஜகரியா அலைஹிவசல்லம்
  23. நபி யஹ்யா அலைஹிவசல்லம்
  24. நபி ஈசா அலைஹிவசல்லம்
  25. நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்

புதன், 11 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் உணர்த்தும் ஆறு கடமைகள்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட(அறிவுரை கூறிட) வேண்டும் என்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும் (அறிவுரை கூறுவதும்), அவருக்குத் தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால் அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்றுவிட்டால், அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய "ஜனாஸா'வுடன் செல்வதும் தான் அவருக்கு உம்மீதுள்ள உரிமைகளாகும். (அதாவது அவருக்கு நீர் ஆற்றவேண்டிய கடமைகளாகும்)'' (முஸ்லிம்)

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ரமழான் மாதமே வருக

1. உங்களிடம் ரமழான் மாதம் வந்திருக்கிறது. அது அருள் நிறைந்த மாதமாகும். (அஹ்மத், நஸாஈ)
2. முனாபிக்குகளுக்கு ரமழான் மாதத்தை விட மோசமான ஒரு மாதம் கிடையாது. (இப்னு ஹுஸைமா)
3. ரமழானின் ஒவ்வோர் இரவிலும் அல்லாஹ்வுக்கு நரகில் இருந்து விடுதலை செய்யக் கூடிய ஒருவர் இருப்பார். (திர்மிதி)...............
4. அந்த இரு பெண்களும் அல்லாஹ் ஹலாலாக்கியதைக் கொண்டு நோன்பு நோற்றார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதைக் கொண்டு நோன்பு திறந்தார்கள். (அஹ்மத்) இவர்கள் புறம் பேசியதால் நோன்பை முறித்துக் கொண்டவர்கள்.
5. ரமழான் தாராளத்தன்மையின் மாதம். (இப்னு ஹுஸைமா, பைஹகி)
6. நோன்பாளியான ஒவ்வோர் அடியாருக்கும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு துஆ இப்தார் வேளையில் உண்டு. (அஹ்மத், திர்மிதி)
7. நன்மையை விரும்புபவனே (ரமழானில்) முன்னோக்கி வா. தீமையை விரும்புபவனே (தீமையை) குறைத்துக் கொள். (திர்மிதி, நஸாஈ, ஹாகிம்)
8. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விட சுகந்தமானது. (அஹ்மத்)
9. ரமழானில் நல்லதோர் பண்பின் மூலம் யார் அல்லாஹ்வை நெருங்கு கிறாரோ அவர் ஏனைய நாட்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவரைப் போலாவார். (இப்னு ஹுஸைமா, பைஹகி) ரமழானில் யார் ஒரு பர்ளை நிறை வேற்றுகிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது பர்ளுகளை நிறை வேற்றியவர் போலாவார். புஹாரி, முஸ்லிம்) ரமழானில் செய்யப்படும் உம்றா ஒரு ஹஜ்ஜுக்கு சமனாகும். (புஹாரி, முஸ்லிம்)
10. ரஸூல் (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தை அடைந்தால் தனது உடை யை இறுகக் கட்டிக் கொண்டு தனது இரவுகளை உயிர்ப்பிப்பார். தனது குடும்பத்தை எழுப்பி விடுவார். (ஹாகிம், இப்னு அஸாகிர்)
11. சுவனத்தில் ரய்யான் என்றோர் வாசல் உள்ளது. அதில் நோன்பாளிகள் நுழைவார்கள். ஏனையோர் அதில் நுழைய மாட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)
12. ஹூர்லீன்கள் ரமழான் மாதத்தில் அல்லாஹ்விடம் திருமணப் பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் யாரேனுமிருக்கிறீர்களா அல்லாஹ் அவருக்கு திருமணம் முடித்துக் கொடுக்க காத்திருக்கிறான் என கூவிக் கொண்டே இருப்பார்கள். (பைஹகீ)
ஹூர்லீன்கள் அல்லாஹ்வின் நேசர்களுடன் தேனாற்றில் ஒய்யாரமாக வீற்றிருந்து அவர்களுடன் தேன் பருகிக் கொண்டிருக்கையில் கூறுவார்கள் அல்லாஹ் உன்னை வரட்சியான ஒரு நாளில் பார்த்தான். நீ அப்போது தாகத்தின் காரணமாக கடுமையாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாய். அப்போது அல்லாஹ் மலக்குமார்க ளிடம் உன்னைப் பற்றி பெருமையாக பேசினான்.
அவன் சொன்னான் “எனது அடியானைப் பாருங்கள். அவன் தனது மனைவியையும் இச்சைகளையும் உணவையும் பானத்தையும் எனக்காக விட்டுவிட்டான். என்னிடம் இருப்பதை விரும்பி விட்டுவிட்டான். அவனை நான் மன்னித்ததாக உங்களை சாட்சியாக வைத்து சொல்கிறேன். அல்லாஹ் அன்று உன்னை மன்னித்து என்னை உனக்கு திருமணம் செய்து வைத்தான்” (இப்னு றஜப், வாதாஇபுல் ஈமான்)
13. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்குச் சொன்னது எது? லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. (கத்ர் 23)
14. நோன்பும் இரவும் நேர வணக்கமும் மறுமைநாளில் அடியானுக்கு ஷபாஅத் செய்யும் நோன்பு சொல்லும்: “இறைவா நான் உணவையும் பானத்தையும் பகல் நேரங்களில் தடுக்கப்பட்ட இச்சைகளை விட்டும் அவனை நான் தடுத்தேன்.” குர்ஆன் சொல்லும்: “நான் இரவில் அவனை தூக்கத்தை விட்டும் தடுத்தேன். எனவே எனக்கு அவனது விடயத்தில் ஷபாஅத் செய்ய அனுமதி தா?” (அனுமதிக்கப்படும்போது) அவையிரண்டும் ஷபாஅத் செய்யும். (அஹ்மத்)
15. அன்று பிறந்த பாலகன் போன்று தனது பாவங்களை விட்டும் மனிதன் ரமழானிலிருந்து வெளிவருவான். புகாரியிலும் முஸ்லிமிலும், அஹ்மதி லும் வரும் பல ரிவாயத்கள் இதனை வலியுறுத்துகின்றன. யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன் செய்த பாவங்களனைத்தும் மன்னிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

கொய்யா பழம்

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது
சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!
*கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
*கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
*கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
*கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
*கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

முஸ்லிமிடம் இருக்க வேண்டிய உபகாரப் பண்புகள்

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 46:36)

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

உண்மை உரைப்பது இறைநம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உண்மைப் பேசுபவர் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவார்,

உண்மைப் பேசுபவர் உலகில் நல்ல மனிதர் என்று பிறரால் போற்றப்படுவார், போற்றுதலுக்குரிய அவர் கூறும் உபதேசங்களை ஏற்று தங்களையும் சீர் திருத்திக் கொள்ள பலர் முன் வருவர். தான் உண்மைப் பேசி, பிறரையும் சீர் திருத்த முயற்சித்ததற்காக மறுஉலகில் இறைவனின் மகத்தான கூலிகளைப் பெற்று நிரந்தரமான சுவனச் சோலைகளில் வாழ்வார்.

பொய் பேசுபவர் ஈருலகிலுடம் இழிவை தேடிக் கொள்வார்.

பொய்ப் பேசுபவர் உலகில் பிற மனிதர்களால் பொய்யர் என்று இகழப்படுவதுடன் இவர் எத்தனை தத்துவங்களை முத்துக்களாக உதிர்த்தாலும் அனைத்தையும் மக்கள் குப்பைத் தொட்டிக்கே அனுப்புவார்கள். பொய் பேசுபவர் தான் வாழ்வதே கடினம் என்பதால் அவர் பொய் பேசுவதை விடாதவரை பிறரை சீர் திருத்துவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் மறுஉலகில் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாகி நரகத்தில் தள்ளப்படுவார்.

தமிழ் பழமொழி
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை

ரமலான்


ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பானம் அருந்தும்போது

நபி மொழி
அபூ சயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்:
"பானத்தில் ஊதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்". "பாத்திரத்தில் தூசியை நான் பார்கிறேன் " என்று ஒருவர் கேட்டார். " அதை எடுத்து போடுவீராக" என்று நபி (ஸல்) கூறினார்கள் . " ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை" என்று அவர் கூறினார். " உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக (விட்டு, விட்டுக் குடிப்பீராக) " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதீ)