செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

உண்மை உரைப்பது இறைநம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உண்மைப் பேசுபவர் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவார்,

உண்மைப் பேசுபவர் உலகில் நல்ல மனிதர் என்று பிறரால் போற்றப்படுவார், போற்றுதலுக்குரிய அவர் கூறும் உபதேசங்களை ஏற்று தங்களையும் சீர் திருத்திக் கொள்ள பலர் முன் வருவர். தான் உண்மைப் பேசி, பிறரையும் சீர் திருத்த முயற்சித்ததற்காக மறுஉலகில் இறைவனின் மகத்தான கூலிகளைப் பெற்று நிரந்தரமான சுவனச் சோலைகளில் வாழ்வார்.

பொய் பேசுபவர் ஈருலகிலுடம் இழிவை தேடிக் கொள்வார்.

பொய்ப் பேசுபவர் உலகில் பிற மனிதர்களால் பொய்யர் என்று இகழப்படுவதுடன் இவர் எத்தனை தத்துவங்களை முத்துக்களாக உதிர்த்தாலும் அனைத்தையும் மக்கள் குப்பைத் தொட்டிக்கே அனுப்புவார்கள். பொய் பேசுபவர் தான் வாழ்வதே கடினம் என்பதால் அவர் பொய் பேசுவதை விடாதவரை பிறரை சீர் திருத்துவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் மறுஉலகில் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாகி நரகத்தில் தள்ளப்படுவார்.

தமிழ் பழமொழி
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக