செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ரமழான் மாதமே வருக

1. உங்களிடம் ரமழான் மாதம் வந்திருக்கிறது. அது அருள் நிறைந்த மாதமாகும். (அஹ்மத், நஸாஈ)
2. முனாபிக்குகளுக்கு ரமழான் மாதத்தை விட மோசமான ஒரு மாதம் கிடையாது. (இப்னு ஹுஸைமா)
3. ரமழானின் ஒவ்வோர் இரவிலும் அல்லாஹ்வுக்கு நரகில் இருந்து விடுதலை செய்யக் கூடிய ஒருவர் இருப்பார். (திர்மிதி)...............
4. அந்த இரு பெண்களும் அல்லாஹ் ஹலாலாக்கியதைக் கொண்டு நோன்பு நோற்றார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதைக் கொண்டு நோன்பு திறந்தார்கள். (அஹ்மத்) இவர்கள் புறம் பேசியதால் நோன்பை முறித்துக் கொண்டவர்கள்.
5. ரமழான் தாராளத்தன்மையின் மாதம். (இப்னு ஹுஸைமா, பைஹகி)
6. நோன்பாளியான ஒவ்வோர் அடியாருக்கும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு துஆ இப்தார் வேளையில் உண்டு. (அஹ்மத், திர்மிதி)
7. நன்மையை விரும்புபவனே (ரமழானில்) முன்னோக்கி வா. தீமையை விரும்புபவனே (தீமையை) குறைத்துக் கொள். (திர்மிதி, நஸாஈ, ஹாகிம்)
8. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விட சுகந்தமானது. (அஹ்மத்)
9. ரமழானில் நல்லதோர் பண்பின் மூலம் யார் அல்லாஹ்வை நெருங்கு கிறாரோ அவர் ஏனைய நாட்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவரைப் போலாவார். (இப்னு ஹுஸைமா, பைஹகி) ரமழானில் யார் ஒரு பர்ளை நிறை வேற்றுகிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது பர்ளுகளை நிறை வேற்றியவர் போலாவார். புஹாரி, முஸ்லிம்) ரமழானில் செய்யப்படும் உம்றா ஒரு ஹஜ்ஜுக்கு சமனாகும். (புஹாரி, முஸ்லிம்)
10. ரஸூல் (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தை அடைந்தால் தனது உடை யை இறுகக் கட்டிக் கொண்டு தனது இரவுகளை உயிர்ப்பிப்பார். தனது குடும்பத்தை எழுப்பி விடுவார். (ஹாகிம், இப்னு அஸாகிர்)
11. சுவனத்தில் ரய்யான் என்றோர் வாசல் உள்ளது. அதில் நோன்பாளிகள் நுழைவார்கள். ஏனையோர் அதில் நுழைய மாட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)
12. ஹூர்லீன்கள் ரமழான் மாதத்தில் அல்லாஹ்விடம் திருமணப் பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் யாரேனுமிருக்கிறீர்களா அல்லாஹ் அவருக்கு திருமணம் முடித்துக் கொடுக்க காத்திருக்கிறான் என கூவிக் கொண்டே இருப்பார்கள். (பைஹகீ)
ஹூர்லீன்கள் அல்லாஹ்வின் நேசர்களுடன் தேனாற்றில் ஒய்யாரமாக வீற்றிருந்து அவர்களுடன் தேன் பருகிக் கொண்டிருக்கையில் கூறுவார்கள் அல்லாஹ் உன்னை வரட்சியான ஒரு நாளில் பார்த்தான். நீ அப்போது தாகத்தின் காரணமாக கடுமையாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாய். அப்போது அல்லாஹ் மலக்குமார்க ளிடம் உன்னைப் பற்றி பெருமையாக பேசினான்.
அவன் சொன்னான் “எனது அடியானைப் பாருங்கள். அவன் தனது மனைவியையும் இச்சைகளையும் உணவையும் பானத்தையும் எனக்காக விட்டுவிட்டான். என்னிடம் இருப்பதை விரும்பி விட்டுவிட்டான். அவனை நான் மன்னித்ததாக உங்களை சாட்சியாக வைத்து சொல்கிறேன். அல்லாஹ் அன்று உன்னை மன்னித்து என்னை உனக்கு திருமணம் செய்து வைத்தான்” (இப்னு றஜப், வாதாஇபுல் ஈமான்)
13. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்குச் சொன்னது எது? லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. (கத்ர் 23)
14. நோன்பும் இரவும் நேர வணக்கமும் மறுமைநாளில் அடியானுக்கு ஷபாஅத் செய்யும் நோன்பு சொல்லும்: “இறைவா நான் உணவையும் பானத்தையும் பகல் நேரங்களில் தடுக்கப்பட்ட இச்சைகளை விட்டும் அவனை நான் தடுத்தேன்.” குர்ஆன் சொல்லும்: “நான் இரவில் அவனை தூக்கத்தை விட்டும் தடுத்தேன். எனவே எனக்கு அவனது விடயத்தில் ஷபாஅத் செய்ய அனுமதி தா?” (அனுமதிக்கப்படும்போது) அவையிரண்டும் ஷபாஅத் செய்யும். (அஹ்மத்)
15. அன்று பிறந்த பாலகன் போன்று தனது பாவங்களை விட்டும் மனிதன் ரமழானிலிருந்து வெளிவருவான். புகாரியிலும் முஸ்லிமிலும், அஹ்மதி லும் வரும் பல ரிவாயத்கள் இதனை வலியுறுத்துகின்றன. யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன் செய்த பாவங்களனைத்தும் மன்னிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக