வெள்ளி, 21 செப்டம்பர், 2012

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு தவ்ஹீத் ஜமா அத் கண்டனம்

காரைக்கால், செப். 20: குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாட்டைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவ்ஹீஜ் ஜமா அத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவ்ஹீத் ஜமா அத் மேலாண்மைக் குழு உறுப்பினர் பஷீர் முகமது அல்தாபி அளித்த பேட்டி:

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமா அத் வழிபாடு மற்றும் இயக்கப் பணிகளை செய்துவருகிறது. இந்த இயக்கத்திற்கு எதிரான கருத்துடைய இஸ்லாமியர் சிலர் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில், அங்கு இயக்க செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

வழிபாட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்செயல்களை கண்டித்து ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அம்பரகத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செயல் வன்மையாக கண்டிக்தத்தக்தது.

இஸ்லாத்தில் சீர்திருத்தப் பணிகளை செய்துவரும் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எங்களுக்கு எதிரான செயல்களை செய்துவருகின்றனர்.

இப்பிரச்னையில் நியாயம் கிடைக்கும் வரை போராடும்.

இப்பிரச்னை தொடர்பாக புதுவை முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பங்கேற்போம்.

அதேவேளையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒருசார்புடைய போக்கைக் கண்டித்து, காரைக்காலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

பேட்டியின்போது அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவர் அப்துல்ஹக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக