வியாழன், 20 செப்டம்பர், 2012

ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்துமாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

அம்பகரத்தூர்:அம்பகரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து, மாணவர்களும் பெற்றோரும்சாலை மறியலில் ஈடுபட்டனர்.காரைக்கால் அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 623 மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலைப் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் பிரிவுகளில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி ஆரம்பித்து 3 மாதங்கள் கடந்தும் இதுவரை கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள், துணை முதல்வர், எல்.டி.சி., பணியிடங்கள் காலியாக உள்ளன.


கலெக்டரிடம் மனு:கடந்த ஜூன் மாதம் கலெக்டர் அசோக்குமாரை சந்தித்த மாணவர்கள், காலி பணியிடங்களை நிரப்பக் @காரிமனு கொடுத்தும் பலனில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக மாணவர்கள் முற்றுகை, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

சாலை மறியல்:அதிகாரிகள் நடவடிக் எடுக்காததால், மாணவர்கள் ‌நேற்று வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் அம்பகரத்தூர் போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்குத் துவங்கிய மறியலால் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

‌பேச்சுவார்த்தை:பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர், இயக்குனர் ஆகி@யாரிடம் பேசியுள்ளதாகவும், தற்போது கணிதப் பாடத்திற்கு உட@ன ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாவும், மற்ற ஆசிரியர்கள் 3 தினங்களில் நியமிக்கப்படுவார்கள் என, எம்.எல்.ஏ. கூறினார். இதைத் தொடர்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நன்றி: தமிழ்.யாஹூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக