ஞாயிறு, 17 ஜூலை, 2011

அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ஐந்தாவது பொதுக்கூட்டம்


துபாய்: ஜூலை, 15: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ஐந்தாவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1. அம்பகரதூரில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் குடிநீர் வசதி (குளிர்சாதன பெட்டி) செய்து தரப்படும்.

2 . வரும் ரமலான் மாதத்தில், அம்பகரத்தூர் மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுபொருட்கள் வழங்கப்படும்.

3. நமதூரில் முதியவர் ஒருவருக்கு ரூபாய் 2500.௦௦/- மருத்துவ செலவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது .

4 . அம்பகரதூரை சேர்ந்த இரண்டு பெண்ணிற்கு திருமண செலவிற்காக தலா ரூபாய் 3000.00/- மற்றும் 2000.00/- வழங்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் வரவு செலவுகளை சங்கத்தின் பொருளாளர் மகபூப் அலி தெரிவித்தார்.

அடுத்த கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட்டு மாதம் 12 ஆம் தேதி நடை பெரும் என்று சங்கத்தில் தலைவர் தெரிவித்தார்
கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் P .M . ரபீக், துணை செயலாளர் A .J . ஷாகுல் மற்றும் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்,

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நமதூர் கமாலியா தெருவை சேர்ந்த ஹாஜி அப்துல் மஜீத் அவர்களின் மகனார் முஹம்மது நவ்சாத் மற்றும் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த டாக்டர் அலாவுதீன் அவர்களின் மகனார் முஹம்மது சமீம் ஆஹிய இருவரும் லண்டனில் இருந்து வருகை புரிந்திருந்தனர், அவர்களை சங்கத்தின் சார்பாக கவுரவிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுவதால் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக