திங்கள், 31 அக்டோபர், 2011

நவம்பர் 1-பொது போக்குவரத்து நாள் – இலவசமாகப் பயணிக்கலாம்


துபாயில் இருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வாகனத்தை நாளை ஓரங்கட்டி நிறுத்திவிடுங்கள்.

மெட்ரோ, சாலைப் பேருந்துகள், நீர்நிலை வாகனங்கள் உட்பட எங்களின் எந்தப் பொது வாகனத்திலும், நாளை இலவசமாகப் பயணியுங்கள் என்று துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

நாளை நவம்பர் 1-ம் நாள் துபாயில் பொது போக்குவரத்து நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, பொதுமக்களிடையே பொது போக்குவரத்தில் ஆர்வங் கூட்டுவதற்காகவும், பொது போக்குவரத்தில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகவும் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது. Nol அட்டைகள் வைத்திருக்கும் யாரும் நாளை ஒருநாள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"மக்கள், பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பதன் மூலம் சாலை நெரிசலையும், சூழல் மாசுகளையும் மிகவும் குறைக்க முடியும். இதனால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். சிரமங்களைக் குறைக்கலாம். இது பற்றிய விழிப்புணர்வை எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், பாடசாலைகளிலும் ஏற்படுத்த வேண்டும்" என்று சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஈசா அப்துல்ரஹ்மான் அல்தோசரி என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "அதிகமதிகம் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவோரில் ஐம்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் Nol அட்டையில் 100 திர்ஹம்கள் அன்பளிக்கப்படும்" என்றார் அவர்.
நன்றி: இந்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக