திங்கள், 31 அக்டோபர், 2011

சென்னை-காரைக்கால் ரயில் சேவை நவம்பர் 11-ல் தொடக்கம்

சென்னையிலிருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலுக்கு தினந்தோறும் ரயில் சேவை நவம்பர் 11-ம் தேதி தொடங்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சென்னையிலிருந்து காரைக்காலுக்கு தினமும் ரயில் சேவை நவம்பர் 11-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. சனீஸ்வரன் பகவான் கோயில் இருக்கும் காரைக்கால் இதனால் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறும். மேலும் காரைக்காலில் இருந்து சேலத்துக்கு ரயில் சேவை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.புதுச்சேரி ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணமாக புனித மெக்கா, மதினாவுக்கு சுமார் 200 பேர் சென்று வந்தனர். இப்போது மத்திய ஹஜ் கமிட்டி, ஒவ்வொரு மாநிலத்தின் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில்தான் ஹஜ் பயணம் செய்ய அனுமதி கொடுக்கின்றனர். அந்த அடிப்படையில் புதுச்சேரியில் இருந்து 78 பேர் மட்டும் செல்ல முடியும். இருப்பினும் இதை 150 பேர் அளவுக்கு உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன் என்றார் நாராயணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக