வியாழன், 17 நவம்பர், 2011

கேன்சரை தடுக்க டாக்டர்கள் அட்வைஸ் : பழங்கள், பிளாக் டீ (சுலைமானி) சாப்பிடுங்க !

மது, புகை - இந்த இரண்டு பழக்கமும் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவற்றை நிறுத்திவிட்டு பிளாக் டீ, பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மது, புகை பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக நுரையீரல் ஆராய்ச்சி பிரிவு டாக்டர்கள் ஸ்டான்டன் சியு, கைசர் பெர்மானென்டி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 1978-ம் ஆண்டு முதல் 1985 வரை நடத்தப்பட்ட ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. 1.26 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது.
இவர்களில் பலர் தொடர் மதுப் பழக்கம் உள்ளவர்கள். ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி கைசர் கூறியதாவது: மது பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது. தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் உள்ள 1,852 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. நோய் பாதிப்பு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால், நோய் தீவிரம் ஆகாமல் எளிதாக விடுபட்டனர்.
புகை, மது பழக்கம் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடியவை. இரண்டு பழக்கமும் ஒருசேர இருந்தால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதய பாதிப்புகளும் தலைதூக்கும். புகை, மது பழக்கத்தை கைவிட்டு, பிளாக் டீ, பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
-நன்றி: தினகரன்.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவுகள் நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு