புதன், 24 நவம்பர், 2010

நவ.25ல் ஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி திறந்து வைக்கிறார்


ஷார்ஜா : ஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 25.11.2010 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறார் என அதன் தலைவர் சுதீஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி அவர்களின் ஒத்துழைப்புடன் ஆறு ஆண்டு கால பெரும் முயற்சியில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையம் இந்திய வர்த்தகர்கள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு பாலமாக செயல்படும்.

1970 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் வருடத்திற்கு 180 மில்லியன் டாலராக இருந்து தற்பொழுது அது 45 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மையம் ஷார்ஜாவில் திறப்பு விழா காண இருப்பதற்கு ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் டைரக்டர் ஜெனரல் ஹுசைன் அல் மஹ்மூதி பாராட்டு தெரிவித்தார். இம்மையத்தின் வளர்ச்சிக்கு எல்லாவித ஒத்துழைப்புகளும் நல்கப்படும் என்றார்.

ஊடகங்கள் இந்த மையம் குறித்த விழிப்புணர்வினை வர்த்தகர்கள் மத்தியில் ஏற்படுத்திட முன்வரவேண்டும் என இதன் இயக்குநர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
நன்றி:முதுகுளத்தூர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக