சனி, 13 நவம்பர், 2010

காரைக்கால் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


காரைக்கால் : காரைக்கால் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலம் எதிரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஷாஜகான், யூசூப்கான், நைனாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் லியாகத் அலி,செயலர் ஆரீப் மரைக்காயர், த.மு.மு.க., மாவட்ட செயலர் அப்துல்ரஹீம் மற்றும் நகர செயலர் அக்பர்ஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட தலைவர் லியாகத் அலி பேசும்போது, நகராட்சி கணக்கை சரிசெய்ய இளநிலை கணக்காளர் பதவியை உருவாக்கவேண்டும். காரைக்காலில் பல விபத்துகளுக்கு காரணமாக சாலைகளில் திரியும் கால்நடைகள், பன்றி,நாய் மற்றும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்கால் நகராட்சியில் 85 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற பராமரிப்புக்கு அனுப்பாத பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவேடுகளை உடனே நீதிமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக