வியாழன், 25 நவம்பர், 2010

தேர்தலில் NRIகள் வாக்களிக்கலாம்! வயலார் ரவி


புது டெல்லி: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைதேர்தல்களில் ஓட்டுப் போட வழிவகை செய்யும் மசோதா கடந்த மழை கால தொடரில் பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான அரசு ஆணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வயலார் ரவி மேலும் கூறுகையில், வெளிநாட்டுக்கு வேலையின் நிமித்தமாக சென்று, குடி உரிமை பெறாமல், அங்கேயே வாழ்ந்து வரும் இந்தியர்கள், தேர்தல் நடக்கும்போது இந்தியாவுக்கு வந்து தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

சவூதிஅரேபியா, துபாய், குவைத் போன்ற அரபு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டும் இந்தியர்கள் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலை நிமித்தமாக சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்

1 கருத்து: