புதன், 22 டிசம்பர், 2010

காஸ் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் அரசுக்கு தே.மு.தி.க., வலியுறுத்தல்

காரைக்கால் : காரைக்காலில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைபோக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என தே.மு.தி.க., வலியுறுத்தி உள்ளது. காரைக்கால் தே.மு. தி.க., மாவட்ட செயலர் அசனா வெளியிட்டுள்ள அறிக்கை: காரைக்காலில் கடந்த பல நாட்காளாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. சமையல் எரிவாயு கேட்டு பதிவுசெய்து பல நாட்கள் ஆகியும், வீடுகளுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் சரி வர செயல்படுவதில்லை. எரி வாயு உற்பத்தி நிறுவனங்கள் தட்டுப்பாடுன்றி சிலிண்டர் வழங்கியும், காரைக்காலில் உள்ள தனியார் ஏஜென்சிகள் மக்களுக்கு காஸ் சிலிண்டரை வழங்காமல் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து காஸ் சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் தனியார் ஏஜென்சி முன் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக